EBOOK

About
திருவாளர் தேசீயம் பிள்ளை - கலைஞர் மு. கருணாநிதி
திருவாளர் தேசீயம்பிள்ளை எனும் நாடகம் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் அரிய படைப்பு. கழகத்தோழர்கள் ஏன் அரசியல்வாதிகள் ஒவ்வொருவருடைய கையிலும் இருக்க வேண்டிய ஒப்பற்ற நூலாகும்.
எமதர்ம ராஜனுடைய தர்பார் கூடுகிறது. எலும்பு அங்கிகளை அணிந்த வீரர்கள். இரு மருங்கிலும் அணி வகுத்து நிற்கிறார்கள். கபால ஓடுகளில் தோரண விளக்குகள் கொலுமண்டப மெங்கும் ஏற்றி வைக்கப் பட்டு ஒளி மங்கி விடாமல் தூண்டி விடுவதற்காக அடிக்கடி மனிதக் கொழுப்பு வார்க்கப்பட்டு நரம்புத் திரிகளும் இடப்படுகின்றன. ஒரு பயங்கரமான உருவம் தலையை மேலே தூக்கி விழி பிதுங்குவது போல உரத்த குரலெடுத்து 'அய்யோ! அய்யோ!!, என்று கத்துகிறது. அது தான் சபைக்கு மன்னன் வருவதை அறிவிக்கும் ஒலிக் குறிப்பு!
அந்த ஒலியை அடுத்து நான்கு எருமை மாடுகள் பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு நடைபோட்டு வருகின்றன. அதற்கடுத்து, எமதர்மன் இரண்டு முரடர்களின் தோள்மீது உட்கார்ந்து கொண்டு'பிரேதங்களால் அமைக்கப்பட்ட ஆசனத்தின் பக்கம் வந்து இறங்குகிறான்.
சபையில் ஒரே ஆரவாரம் 'அய்யோ'என்ற மகிழ்ச்சிகரமான வரவேற்பு ஆஸ்தானப் புலவர்; கவிஞர் ஒப்பாரி எழுந்து வாழ்த்து கீதம் வழங்குகிறார்.
அடுத்தாற்போல் கொள்ளிச்சட்டி நடனம் ஆரம்பமாகிறது. வடிவழகி வாய்க்கரிசி தலைமை ராஜநர்த்தகியாக நடனத்தில் பங்கு கொள்கிறாள். ரத்தத்தால் சிவப்பாக்கப்பட்ட உதடுகளையும் மீறிக் கொண்டு வெளியே தலை நீட்டியிருக்கும் ஆனைத் தந்தம் போன்ற பற்களின் ஒளியில் எமன், உள்ளத்தைப் பறி கொடுக்கிறான். நடன மங்கைகள் ஒவ்வொருவரையும் பாசக் கயிற்றால் பிணைத்துத் தழுவிப் பரிசளித்து அனுப்பி வைக்கிறான்.