EBOOK

Thee Paravattum

C. N. Annadurai
(0)

About

பேரறிவும், பலமொழித்திறனும் உயர்ந்த முறையில் விவாதம் செய்யும் ஆற்றலும் பெற்ற பேரறிஞர்கள் நால்வர் நிகழ்த்திய இராமாயணச் சொற்போர் இந்நூல்!

கம்பன் காவியம் எத்தகையது? அந்த காவியம் நாட்டிற்கு செய்த நன்மைகளென்ன? அது புரிந்த தீமைகள் எவை? என்பனபற்றியும் திராவிட நாட்டு மக்கள் எவ்விதம் தாழ்ந்தும் தேய்ந்தும் போயினர் என்பதையும், அவர்கள் இன உணர்ச்சி பெற்று திகழவேண்டிய வழி வகைகள் எவை? என்பதையும், மொழிப்பற்றுடன் விழிப்புற்று எழுவதற்கு என்ன வழி? என்பதையும், இதில் விளக்கமாக விவாதித்துள்ளனர் அறிஞர்கள் நால்வர்.

விவாத்ததில் தம்பன் கவி நயங்களையும், இலக்கண அமைப்பு முறைகளையும், கற்பனைகளையும், வர்ணனைகளையும் உயர்த்திப் பேசினர் அறிஞர்களான சோமசுந்தரனாரும், சேதுப்பிள்ளை அவர்களும்!

கம்பன் கவியில் குறைந்தவன் என்றும் புலமை இல்லாதவன் என்றும் அறிவுள்ள எவரும் கூறார் என்பது அனைவருக்கும் தெரியும். சுயமரியாதைக்காரர்களான முற்போக்குக்கு வழிகோலிகளின் குற்றச்சாட்டு "கம்பன் கவியல்ல, என்பதல்ல."

"கம்பன் ஆரியனைக் கடவுளாக்கினான், தமிழர்களை அவர்கள் தாள்பணியச் செய்தான். இதனால் தமிழகம் தன்மானம் இழந்துவிட்டது, வீரமரபில் தோன்றியவர்கள் வீழ்ச்சியுற்றனர்" என்பதேயாகும்.

மறுபடியும் வீழ்ச்சியுற்ற இனம் எழுச்சியுறவேண்டும், மனித முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாய் இருப்பவைகளை தகர்த்து எறியவேண்டும். மனித வாழ்வின், முன்னேற்றத்திற்கு தேவையானவைகளைச் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தால் நல்ல பல கருத்துக்களை திராவிடர் தலைவர் அறிஞர் சி. என். அண்ணாத்துரை அவர்கள் இந்த உரையாடல் மூலம் திராவிட மக்களுக்குத் தந்திருக்கின்றார்.

Related Subjects

Artists