EBOOK

Siruvar sirumiyar desiya geetham

Bharathidasan
(0)

About

கங்கைநதி தலையில் உண்டு சிவனார்அல்ல,
காலடியிற் குமரி யுண்டு ராமன்அல்ல,
சங்கையற்ற வயதுண்டு கிழவி அல்ல,
சாத்திரத் தின் ஊற்றனையாள் கலைமா தல்ல,

எங்குலத்தைப் பெற்றதுண்டு பிரமன்அல்ல,
ஏற்றுண்ணும் எண்ணமில்லை இறுமாப்பல்ல,
லங்கை என்று பாடிடுவர் புலவ ரெல்லாம்,
மற்றி தனை இன்னதென வழுத்து வீரே.

"பாவம் ஒன்றினுக்கே அஞ்சும் பழக்கம்
ரண சூரருக்கும் சலியாத ஆண்மை
தவமே தனக்குத் துணையென்ற எண்ணம்
வானொத்த வாழ்வு வாய்ந்திட்ட கீர்த்தி
சிவனார் தமக்கே பிரியாத தொண்டு"
சொல்லும் இவ் வைந்தின் தொடக்கம் தன்னைக்
கூட்டிப் பார்த்துக் கூறினால்
நாட்டை விட்டவன் நற்பெயர் தோன்றுமே

அதிக உயரத்தில் ஆகாய வாணி
அவளூர்க்கும் நம்மூர்க்கும் வைத்ததோர் ஏணி
மதிப்புக் கடங்குமோ அவ்வேணி உயரம்
மனிதர்சிலர் ஏறப்பார்த் தடைந்தனர் துயரம்
குதித்துக் குதித்திறங் கிடுவர்சில பெண்கள்
குளிரில் இறங்குகையில் பாடிடுவர் பண்கள்
இதற்கு விடைசொல்லக் கூடுமோ உன்னால்
ஏற்ற பரிசளிக்க வாகும் இது சொன்னால்

ஏழ்மையைப் போக்கிவிடும் இலக்ஷ்மி அல்ல.
எதிரிற் சுழலும் அது சூரியன் அல்ல.
தாழ்மையைப் போக்கிவிடும் சற்குரு அல்ல.
தாய்மானம் காக்கும் அது கண்ணனும் அல்ல;
தோழியாய்க் கொண்டதுண்டு காந்தியடிகள்.

தொழும்பை அகற்றும் என்பர் காந்தியடிகள்
ஆழ்ந்து நினைந்துபார் பாரதமைந்தா!
அதன்பிற கின்னதென்று கூறிவிடுவாய்.

ஒன்று சேர்ந்த "தரை" ஆக்க
ஒன்று சேர்ந்த "வலை" கொண்டார்
ஒன்று சேர்ந்த 'படம அற்றார்
உடனே தமது கண் முன்னே
இன்று பாரதம் விடுபட்டால்

Related Subjects

Artists