EBOOK

Oru Maram Pooththadhu

Karunanidhi M.
(0)

About

சிறுகதை உலகில் புரட்சி ஏற்படுத்திய ஓ ஹென்றி தீட்டிய "கடைசி இலை"என்ற சிறுகதையை மைய மாக வைத்து இந்தக் கதையை எழுதுகிறேன்.

அந்த ஆரம்பப் பள்ளியின் மைதானத்தில்
நின்றிருந்த வேப்ப மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மணி 'டாண்... டாண் என்று அடித்து ஓய்கிறது.

வகுப்பறைகளுக்குள் இருந்த வருங்கால மன்னர் களுக்கு அந்த ஒவ்வொரு மணியோசையும் 'விடுதலை விடுதலை'என்று ஒலிப்பது போல் இருக்கிறது.

அனைத்து வகுப்பறைகளிலிருந்தும் சிறார்கள் ஆவலுடன் வெளியேறி மூட்டையிலிருந்த நெல்லிக்காய் சிதறுவதைப் போல நாலா திசைகளிலும் விரைகின்றனர்.

மூன்றாம் வகுப்பு அறையிலிருந்து வெளியேறிய பாபு ஏனோ வழக்கத்துக்கு மாறாக மெதுவாக நடந்தான். தன்னுடன் வரும் நண்பர்களிடம் கூட அவன் கலகலப்பாகப் பேசாமல் தரையைப் பார்த்தவாறே சோர்வாக நடந்தான்!

தூரத்தில் வரும் தனது அன்பு மகனை வீட்டி லிருந்தே கவனித்தாள் தேவகி. வீட்டை நெருங்க நெருங்க அவனது நடையில் வேகம் அதிகரித்தது!

வீட்டு வாசலுக்குள் அவன் நுழையும் வரை பொறுக்க முடியாத தேவகி, வெளியே தாழ்வாரத்துக்கு வந்து அவனை அன்புடன் அணைத்து வரவேற்றாள்!

அவனது கன்னத்தில் தன் இதழ்களை பதித்து 'இச்'என்று ஒரு அன்பு முத்தத்தை அளித்த போது - அவள் திடுக்கிட்டாள்!

"என்ன பாபு:.. உடம்பு காயுது?'என்றபடி அவனது சட்டைக்குள் கையைவிட்டு நெஞ்சையும் நெற்றியையும் தொட்டுப் பார்த்தாள்.

பாபுவுக்கு காய்ச்சல் அடிக்கிறது என்பதை உணர்ந்த அவள், பர பரவென்று அவனை அழைத்துச் சென்று காபி கொடுத்துவிட்டு, கட்டிலில் படுக்க வைத்தாள்.

படுத்திரு கண்ணா... இதோ வர்றேன்!''

Related Subjects

Artists