EBOOK

Nayanmaar Kathai (Part I)

Ki. Va. Jagannathan
(0)

About

தமிழ் இலக்கியங்களில் நாயன்மார் கதைகளைச் சொல்லும் பெரிய புராணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது சரித்திரங்களைச் சொல்வதனால் இதிகாசம் என்று சொல்வதற்கு ஏற்ற பெருமையை உடையது; நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச்சுவையும் பக்திரசமும் துளும்ப உரைப்பது. சேக்கிழார் இயற்றியது பெரிய புராணம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழாரை,
"பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ"
என்று பாராட்டுகிறார்.

இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர் சேக்கிழார்; சென்னையை அடுத்த குன்றத்தூரில் தோன்றினவர். சேக்கிழார் என்பது அவருடைய குலப்பெயர். அருள்மொழித் தேவர் என்பது இயற்பெயர். அவர் சோழ அரசனுடைய மந்திரியாக இருந்து விளங்கினார்.

இலக்கியங்களில் ஈடுபாடுடைய சோழ அரசன் சிவனடியார்களின் வரலாற்றைக் காப்பியமாகப் பாட வேண்டுமென்று விரும்பினான். அவனுடைய விருப்பத்தின்படியே சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தைப் பாடத் தொடங்கினார். சிதம்பரத்துக்கு வந்து இறைவனுடைய சந்நிதானத்தில் இருந்து அதைப் பாடி அரங்கேற்றினார்.

தேவாரப் பாடல்களில் ஆழ்ந்த ஆராய்ச்சியும், தமிழ் நாட்டு ஊர்களைப் பற்றிய அறிவும் சேக்கிழாருக்கு நிரம்ப இருந்தன. சந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையே முதல் முதலாக அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிச் சொல்லுகிறது.

Related Subjects

Artists