EBOOK

Nalla Senapathi

Ki. Va. Jagannathan
(0)

About

தமிழ்நாட்டில் பல காலமாகவே புலவர்களும் புரவலர்களும் வாழ்ந்து தமிழை வளர்த்திருக்கிறார்கள். புலவர்கள் வீரத்தைப் பாராட்டுவார்கள்; கொடைத் திறத்தைப் பாடிப் புகழ்வார்கள். பெரிய போரில் வெற்றி பெற்ற பெரு மன்னர்களுடைய வரலாற்றை நாட்டு வரலாறுகளில் காணலாம். ஆயினும் சிறிய போர்களில் தம்முடைய வீரத்தைக் காட்டிய வீரர்களையும், மிகவும் சிக்கலான சமயங்களில் சாதுரியமும் வீரமும் தோன்றச் செயல் செய்த தீரர்களையும் அத்தகைய பெரு வரலாறுகளில் காணமுடியாது. புலவர்கள் பாடிவைத்த நூல்களிலும், பழைய குறிப்புகளிலும், வாய்மொழியாக வழங்கி வரும் செய்திகளிலும் அவர்களைப் பற்றிய வரலாற்றுத் துணுக்கு கள் மிடைந்திருக்கின்றன. கொடை, மானம், வீரம், அறிவு நுட்பம், பண்பு, புவமை ஆகிய பெருங் குணங்களை விளக்கும் வரலாறுகளாக விரிப்பதற்குரிய வகையில் அந்தத் துணுக்குகள் உள்ளன. அவற்றை வைத்துக் கொண்டு எழுதியவையே இந்தப் புத்தகத்திலுள்ள நிகழ்ச்சிகள்.

சிறிய சிறிய வரலாற்று நிகழ்ச்சிகளானாலும் ஒவ் வொன்றிலும் ஒவ்வொரு பண்பின் விளக்கத்தைக் காணலாம். புலவனுடைய அறிவுத் திறத்தைச் சில நிகழ்ச்சிகள் விளக்குகின்றன; கொடையாளரின் கொடைச் சிறப்பைச் சில வரலாறுகள் புலப்படுத்துகின்றன; வீரர்களின் வீரச் செயல்கள் சிலவற்றால் புலனாகின்றன.

இவற்றை அறிந்து எழுதத் தனிப் பாடல்களும், மண்டல் சதகங்களும், வாய்மொழியாகக் கேட்டவையும்
எனக்குத் துணையாக இருந்தன. இந்தப் பன்னிரண்டு நிகழ்ச்சிகளில் முதலில் உள்ள எட்டும் கொங்கு நாட்டில் நடந்தவை. கொங்கு மண்டல சதகத்திலுள்ள பாடல் களைக் கொண்டும், அவற்றிற்கு மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ள செய்யுட்களைக் கொண்டும் இவற்றை உருவாக்கினேன்.

Related Subjects

Artists