EBOOK

Naadum Naadagamum

Karunanidhi M.
(0)

About

தோழர் மு. கருணாநிதியை பேச்சு மேடை யில் காண்போர் -அவரது பேச்சைக் கேட்போர் - ஒரு எழுச்சியுள்ள நாடகத்தை அனுபவிப்பதாகவே கருதுவார்கள். மேடையில் கூறும் அரசியல் சம்பவங்களாயினும் சரி: அவதிப்படுவோர் பற்றிய செய்திகளாயினும் சரி; கிண்டல் நிகழ்ச்சிகளாயினும் சரி; அத்தனையும் எதிரே காணுகிற காட்சிகளாக சித்தரித்து விஷயத்தில் சம்பந்தப்பட்ட வர்களை பாத்திரங்களாக்கி ஒரு சிறு நாடக மாகவே ஆக்கிவிடுவார். ஆக அவருடைய பேச்சு முடிவதற்குள் மக்கள் மனக்கண்ணால் பல உண்மைகளை நாடக உருவில் கண்டு உணர்ச்சிபெறுவர். அதே முறை அவருடைய சிறுகதைகளிலும் பெறும்பாலும்
கடைப் பிடிக்கப்படுகிறது. சரித்திர உண்மைகளை, சமுதாயக் கீறல்களை, நாடகபாணியில் நறுக்குத் தெரிக்கும் வார்த்தைகளை யமைத்து விளக்கிக்
காட்டிவிடுவார்.

அத்தகைய சிறுகதைகள் சிலவற்றை - அரசியல் கிண்டல்கள் நிறைந்த வைகளை - நூல் வடிவிலே வெளியிட விரும்பி னோம். சம்மதித்தார்.

நாடகத்தால் நாட்டுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் எப்படிப்பட் டவை என்பதை விளக்கும் அவரது சொற் பொழிவு ஒன்றையும் "நாடகம் கூடாது"என நாப்பறை அடிப்போர் நடுவீதிக்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவசியமெனக் கருதி வெளியிட்டிருக்கிறோம்.

Related Subjects

Artists