EBOOK

Makkal Karamum Mannar Siramum

C. N. Annadurai
(0)

About

மார்க்கத் துறையிலே, மன்னன் வற்புறுத்திய முறைகளை ஏற்க, ஸ்காட்லாந்து மக்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். 'என் ஆணைக்கா எதிர்ப்பு' என்று மன்னன் ஆர்ப்பரித்தான். 'எமது கொள்கையை இழக்க மாட்டோம்' என்று மக்கள் முழக்கமிட்டனர். மன்னன், 'போர்' என்றான். மக்கள், 'தயார்' என்றனர்! மன்னன்தான் தயாராக முடியவில்லை; பணமில்லை!!

ஆண்டொன்றுக்கு 9,35,000 பவுன் தேவை என்றனர் படைத்தலைவர்கள். 30,000 வீரர்களாவது தேவை, மலைவாசிகளான ஸ்காட்லாந்துக்காரரை முறியடிக்க! இந்தப் பெருந்தொகையைப் பெறுவது எங்ஙனம்? பழைய சங்கடம் மீண்டும் தலைதூக்கிற்று. சூள் உரைத்துவிட்டான் மன்னன், ஸ்காட்லாந்துக்காரரை அடித்து நொறுக்கி அறிவு புகட்டுவதாக; பணம்? மன்னன், திண்டாடினான்.

அங்கே, ஸ்காட்லாந்தில், தாயகத்தைக் காக்க வீரப்படை திரண்டுவிட்டது. பல ஆண்டுகள், ஸ்வீடன் நாட்டிலே போர்ப் பயிற்சி பெற்றுச் சிறந்து விளங்கிய லெஸ்லீ என்பான், தாயகத்துக்கு ஆபத்து என்பதறிந்து வெளி நாட்டிலிருந்து, தாயகம் வந்து சேர்ந்தான். தணலென்று ஆகிவிட்டது, வீரம்; எண்ணற்ற வீரர்கள்! எதற்கும் அஞ்சாத துணிவு! மக்கள், பெண்டிர் உட்பட, படை எடுப்பை முறியடிக்கக்கூடிப் பணியாற்றினர்.


இவர் ஒரு பிரிவுப்படையுடன் ஸ்காட்லாந்து செல்வது என்றால், வேறோர் பிரிவு வேறு பக்கமிருந்து செல்வது என்றும் ஏற்படலாயிற்று. ஹாமில்டன் சென்றார்; தாயகத்தின் போர்க் கோலத்தையே கண்டார்! காலடி எடுத்து வைத்தால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று வீரமும் நாட்டுப் பற்றும் வீறிட்டெழும் உள்ளத்துடன் கூறிக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் காட்சி தந்தார், ஹாமில்டனின் அன்னை.ஓடினான் மன்னனிடம். 'விபரீதமாகிவிடும்! வேண்டாம் இச்சமர்!

Related Subjects

Artists