EBOOK

About

இதில் உள்ள சிறு கதைகள் வெவ்வேறு சமயங்களில் எழுதியவை. அவ்வப்போது பத்திரிகைக்காரர்கள் கேட்டபோது எழுதி அளித்தவை. இவை யாவுமே பல பத்திரிகைகளிலும் மலர்களிலும் வெளியானவை. வெவ்வேறு மனநிலைகள் இருந்த போது எழுதியவையாதலின் போக்கும் சுவையும் வெவ்வேறாக இருக்கலாம்.

இப்போது இவை ஒரு தொகுதியாக அமுதநிலைய வெளியீடாக வெளியாகின்றன.

இதற்கு முன் வெளியான தொகுதிகளை ஆதரித்த அன்பர்கன் இதனையும் பரிவுகொண்டு ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

எங்கே பார்த்தாலும் நசநச என்று ஈரம். ஐப்பசி அடைமழை என்பது சரியாக இருக்கிறது. வீதியில் நடந்து செல்வதற்கே அருவருப்பாக இருக்கிறது. ஈசுவரன் கோயிலுக்குப் போகும் கூட்டம் குறைவு. ஆனால், முருக முதலியார் சரியாகச் சந்தியா காலத்துக்குப் போகாமல் இருக்க மாட்டார். சூரியன் மலைவாயில் விழும் நேரத்தில் தரிசனம் செய்தால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டு என்று யாரோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதை அவர் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டார்.

ஊரில் இரண்டு கோயில்கள் உண்டு: ஒன்று சுப்பிரமணிய சுவாமி கோயில்; மற்றொன்று சிவன் கோயில். சிவன் கோயில் பெரிது; சுப்பிரமணிய சுவாமி கோயில் அவ்வளவு பெரிதன்று. ஊரின் எல்லையில் இருக்கிறது முருகன் கோயில். ஊரைச் சார்ந்து இருக்கிறது சிவன் கோயில். முருகன் கோயிலுக்குப் போகிறவர்களுக்குப் பக்தி அதிகம் என்று தான் சொல்லவேண்டும். மழையானாலும், வெயிலானாலும் அத்தனை தூரம் நடந்து செல்வதற்கு எல்லோருக்கும் சுறுசுறுப்பு வருமா?

Related Subjects

Artists