EBOOK

Kadal Mel Kumizhigal

Bharathidasan
(0)

About

திங்கள் தோறும் வெளிவரும் நம் குயிலின் 12 குரல்கள் நிறைவுற்றன. முதலாவது ஆண்டு நிறைவு பெற்றது. அதன் நினைவாக இக்குரல் ஆண்டு மலர் என வெளியிடுகிறோம்.

அனைவரும் திறல்நாட் டரண்மனை நிறைந்தனர்.
செம்மறித் திறல் எழுந்து
கைம்மலர் கூப்பிக் கழறுவான் ஆங்கே.
எண்சீர் விருத்தம்
நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள்
நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்
காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே
நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே
உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்.
கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி
கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே.
ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒப்போம்!
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால்!
திருக்கோயில் தொழிற்சாலை! பார்ப்பனரும் கையில்
செங்கோலேந் தும்பிறரும் மக்களைச் சார்ந்தோரே!
பெருவாழ்வுக் கிவையெல்லாம் அடிப்படைத் திட்டங்கள்
பிறிதுள்ள சட்டங்கள் அறிஞர் அமைப்பார்கள்.
வருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்
வகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர்"என்றான்.
செம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார்;
திறல்நாட்டின் குடியரசைச் செயற்படுத்தச் சொன்னார்.
செம்மறிக்கும் பொன்னிக்கும் மின்னொளிக்கும் வையத்
திறலுக்கும் நடைபெற்ற திருமணம் பாராட்டி
நம்மருமை நாடன்றிப் பெருநாட்டை இந்த
நன்னிலையில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டார் மக்கள்.
"செம்மையுறத் திருநாட்டில் மணிக்கொடியும் ஏற்றித்
திகழ்ந்திடுக உலகமெலாம் குடியரசே"என்றார்.

Related Subjects

Artists