EBOOK

About

"எங்கே என் ஜெபமாலை? ஐயோ! ஜெபமாலையின்றி நான் ஒரு கணமும் உயிர் தரியேனே. என் உயிருக்கு உயிர், ஜெபமாலையல்லவா? என் வாழ்வுக்கு வழிகாட்டி, இருதயத்துக்கு இன்பம், துயர் நீக்கும் துணை, கதியளிக்கும் காவல், ஜெபமாலையாயிற்றே, ஜெபமாலையின்றி நான் எப்படி இருக்கமுடியும்?

என் எதிரே,முத்து, ரத்னம்,தங்கம்,பட்டு, எல்லாம் இருந்தும் என் மனம், ஜெபமாலையையே நாடுகிறது. ஜெபமாலை என்னை ஆட்கொண்டபிறகு, வேறு எதற்கும் நான் அடிபணியமாட்டேன். ஜெபமாலை வேண்டும்! இப்போதும், எப்போதும்! என்னுடனேயே இருந்தாகவேண்டும். கொண்டு வா ஜெபமாலையை."

ஜெபமாலை ஒளிந்திருந்த இடத்திலிருந்தே 'களுக்'கெனச் சிரித்தாள். எவ்வளவு பசுப்புகிறான், என்னென்ன புரட்டுப் பேசுகிறான்; உண்மையா அவனுடைய உரை? இல்லை! உள்ளத்திலிருந்தா வந்தன? கிடையாது; உதட்டளவுதான்! ஏன் ஜெபமாலை ஜெபமாலை என்று உருகுபவன் போல நடிக்கிறான்? இலாபமிருப்பதால்!

ஜெபமாலை, கோபுரநாதன் மகள், ஊரெங்கும் கோபுரநாதனுக்கு மதிப்பு, ஜெபமாலையை மணந்ததால், அந்தக் குடும்பச் செல்வாக்கு, ஆண்டிக்குக் கிடைத்தது. ஆண்டி, வேலை வெட்டி செய்யாமல், பரிமளமாக வாழ்ந்ததே ஜெபமாலையின் தயவினால்தான். ஜெபமாலையுடன் ஆண்டி வாழ்ந்ததால்தான், ஆண்டிக்கு, ஊரிலே, செல்வம், செல்வாக்கு எல்லாம். கண்ணியமும் காணிக்கையும் கிடைக்கும்படி செய்ததாலேயே ஜெபமாலைமீது, ஆண்டி தனக்கு அமோகமான காதல் இருப்பதாகக் கூறினான். ஆண்டியின் மனதுக்குச் சந்தோஷமூட்டுவது, ஜெபமாலையின் 'சிபாரிசு'பெற உதவும்; அந்தச் சிபார்சு, கோபுரநாதனின் உதவியைத் தமக்கு வாங்கித் தரும். ஊரார் ஆண்டியை ஆதரித்ததன் மர்மம் அதுவே. ஆண்டிக்குத் தெரியும்

Related Subjects

Artists