EBOOK

About

இன்பக்கடல், சத்திமுத்தப் புலவர் ஆகிய இரு சிறு நாடகங்கள் என்னால் முன்னரே எழுதப்பட்டவை அவை குயிலில் வெளிவந்தவை.

எவற்றில் முன்னது என் கற்பனை; அடுத்தது சத்திமுத்தப் புலவர் வறலாற்றின் தழுவல்.

பட்டு: யார்?

அரச: அரசப்பன்.

பட்டு: ஓ வாருங்கள்; உட்காருங்கள் அத்தான்.

அரச: என்ன பட்டு, உன் குரலில் இத்தனை தளர்ச்சி?

பட்டு: ஒன்றுமில்லை... நமக்குள் ஏற்பட்டுள்ள தொடர்பு ஊர் அறிந்ததாகிவிட்டது. நம் திருமணம் விரைவில் நடந்துவிட வேண்டுமென என்று பெற்றோர் கவலை அடைந்திருக்கிறார்கள்.

அரச: நான்தான் சொன்னேனே, என் காதல் பித்துக்காக உன்னையும், திரண்ட சொத்துக்காக அந்தத் தங்கத்தையும் (நான்) மணந்து கொள்ள வேண்டுமென்று! இதை இனிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டாமா, நீ உன் பெற்றோருக்கு?

பட்டு: ஒப்புவார்களா... உம்...ஒப்புவார்கள்... ஒப்பித்தான் தீர வேண்டும் அவர்கள். எதுவும் பேசிக் கொள்ளாமல் என்னைப் பறிகொடுத்தேன் உங்கட்கு! இட்டோது இதுவும் சொல்வீர்கள். எதுவும் சொல்வீர்கள். நல்லது அத்தான்! ஆமாம். முதலில் எனக்கும் உங்கட்கும் திருமணமா? அல்லது தங்கத்திற்கும் தங்கட்குமா?

அரச: தங்கத்தைத்தான் முதலில் மணந்து கொள்ள வேண்டும்.

பட்டு: அத்தான், கேளுங்கள். நான் பட்டு. முதலில் பட்டணிந்து தானே. பிறகு தங்கத்தையணிவார்கள்?

அரச: இல்லையே, தங்கத்தைப் பெற்றால்தானே பட்டைப் பெற முடியும்? இதில் இன்னொன்னு. என்னென்று கேள்.

Related Subjects

Artists