EBOOK

Ina muzhakkam

M. Karunanidhi
1
(1)

About

இந் நூலில் வந்துள்ள கட்டுரைகள் கலைஞர் கருணாநிதி அவர்கள் அவ்வப்போது முரசொலி முதலிய பத்திரிகை களில் எழுதியவையாகும்.

பாடல்கள் கவிதையல்ல என்ற நூலாக 1945-ல் வெளி வந்தது. இதனைத் தொடுத்து நூலாக வெளியிட்டுக் கொள்ள அனுமதி அளித்த ஆசிரியருக்கு எழுது பண்ணையின் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேம்.
கருணாநிதி அவர்களின் பிற நூல்களைப் போன்று இந் நூலும் மங்கிக் கிடக்கும் தமிழினத்தின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி அப் பெருமக்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் சொல்வதைக் காண்பீர்கள்.

கோவலனையே என் நெஞ்சாரக் காதலித்தேன். கணிகையர் குலத்தில்தான் பிறந்தேன். ஆனால் வாழ விரும்பவில்லை. விஷங்கலவாத நீரோடை என் காதல். என் காதலைப் பாலைவன மாக்கி என் கருத்தில் நுழைந்த கட்டழகரைப் பாண்டியன் பலியிட்டான். அவர் மேல் எனக்கிருந்த அன்பு என்னைத் துறவியாக்கிற்று.
ஆனால் தமிழ்ப் பெண்ணைக் கேளுங்கள்! "காதலிற்சிறந்தவளுக்கு ஒரு உதாரணம் கொடு" என்று!
என்னை வேசி, விபசாரி என்று வசைமாரி பொழிந்து நாடகம் நடத்துவார்கள். சிலப்பதிகாரம் தெரியாதவர்கள், சிந்தனையற்றவர்கள்....!
காதலுக்கு உதாரணம் இந்திரனைக் கூடிய கௌதமரிஷி மனைவி அகல்யாவும், சந்திரனைக் காமுற்ற பிரகஸ்பதி முனிவர் பத்தினி தாரையும் என்று...... கதை கூறுவார்கள்........ காதலுக்காக வாழ்வையே தியாகம் செய்த என்னைச் சொல்ல மாட்டார்கள்!

என் காதலன் மதுரைக் காவலனால் கொல்லப் பட்டார் என்று கேட்டு மன்னனை நீதி கேட்டு, அம் மணிமுடியோன் தன் தவறையுணர்ந்து மாளச் செய்து, மதுரை நகரையே சாம்பலாக்கப் புறப்பட்டேன். என் மனாளனோடு இறப்புலகில் இன்பங் காண எண்ணினேன். நான் மட்டுமா......

Related Subjects

Artists