EBOOK

Chandrodayam

C. N. Annadurai
(0)

About

"இதை நாம் சுமார் 10, 15 வருஷ காலமாகவே சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்கமுடியவில்லை."

"நாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும் அறிவுக்கு நல் விருந்தாகவும் மானத்திற்கு உயர்தர வழி காட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்பது சிறிதும் மிகைப்பட கூறியதாக ஆகாது."

"சமய சஞ்சீவிகளுடன் அரசியல் சேற்றில் புரண்டு அல்லல் படாமல் இம்மாதிரி தொண்டு உண்மையும் பயனளிக்கக் கூடியதுமாகும் என்று தெரிவித்துக் கொண்டு அண்ணாதுரையையும் காஞ்சி திராவிட நடிகர் கழகத்தாரையும் மனமார வாயாரப் பாராட்டி ஆசி கூறுகிறோம்."

நாடகத்திற்கு பெரியார் தலைமை தாங்கி பாராட்டினார். 27.11.43 குடியரசில் தலையங்கமாக எழுதியது.

சிங்காரவேலர்: நான் வயோதிகனானாலும் வைதீக புரியிலே ஒரு சிற்றரசன். அதை பயன்படுத்திக்கொண்டான் வாஞ்சிநாத சாஸ்திரி. என் கண்மனி சந்திராவை ஒரு வயோதிக ஜமீன்தாரருக்கு திருமணம் நடத்திவைத்து அதன் மூலம் தனது பிழைப்புக்கு அஸ்திவாரம் தேட ஆரம்பித்தான். நான் மறுத்தேன். பார்ப்பனியம் படமெடுத்தாடியது. நான் பஞ்சையாக்கப்பட்டேன். வாஞ்சிநாத சாஸ்திரி வெற்றிபெற்றான். சூது சூழ்ச்சியால் பணக்காரனானான். என்மகள் நல்லூர் ஜமீன்தாரணியாக்கப்பட்டு மறுமாதமே விதவையாக்கப்பட்டாள். இந்த நிலையிலும் வைதீகபுரியில் இளவரசன் பட்டத்தை இழக்கவில்லை நான்! மாயேந்திரன்!

Related Subjects

Artists