EBOOK

About
தமிழர் மேன்மையைக் காட்டும் கருத்துக்கள் பல உருவங்களில் தோன்றித் தோன்றி நினைவைக் கவர்வதுண்டு! சும்மா இருந்துவிட முடிகின்றதா?
அவ்வப்போது எழுதி. கிடைத்த ஏட்டில் வெளியிட்டு
வைத்தவைகளே இந்த நாடகங்கள்.
இப்போது நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது அந்த
நாடகங்கட்கு.
தமிழர்கள் ஆதரிக்க. இஃது என் விண்ணப்பம்.
புதுச்சேரியில் முதலியார் தெரு என்பதொன்று. அத்தெருவின் முனையில் இருப்பது சிங்கார முதலியார் வீடு. சிங்கார முதலியார் புதுச்சேரியில் உள்ள பணக்காரர்களில் ஒருவர்; செல்வாக்குள்ளவர்; நல்ல பரோபகாரியுமாவார்.
அந்தச் சிங்கார முதலியார் வீட்டுக்கெதிரில், ஒரு வாரமாகத் தருமன் சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடி முடித்ததில் சிறுத்தொண்டப் பத்தன் கதையைத் துவக்கியிருக்கிறான், மீண்டும்.
தருமனும் அவன் சிற்றாளாகிய சின்னான் என்ற சிறு பையனும் உட்கார்ந்திருக்கிறார்கள். வீதியோரத்தில் சாக்கை விரித்துப் போட்டு. அவர்கட்கு எதிரில் ஒரு திரை விரித்துப் போடப்பட்டிருக்கிறது. அத்திரையில், சிறுத்தொண்டப் பத்தன் கதையில் உள்ள பிரதான கட்டங்கள் சில சித்திரிக்கப்பட்டுள்ளன. கதை பாடுவதற்கு இடையில். கதையில் வரும் சித்திரத்தை அவன் கையில் உள்ள கோலால் மக்கட்குக் குறிப்பிடுவான்.
தருமனின் இடது கை ஒன்றே இரு தாளத்தையும் பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கும். வலது கைதான் படம் காட்டுகிறதே! பக்கத்தில் உள்ள சின்னான் ஒற்றைத் தந்தித் தம்பூராவை மீட்டுகிறான்.
பிள்ளையார் தோத்திரம் முடிந்து விட்டது. கதை ஆரம்பமாகப் போகிறது. எதிரில் சிலர் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் ஆவலாயிருக்கிறார்கள் கதை கேட்க.